5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விமல் நடிப்பில் ‘சார்’ படத்தின் 2-வது ட்ரெய்லர் இதோ!

SIR - Official Trailer 2 | கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உருவாகி உள்ள ‘சார்’ படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இந்தநிலையில் முன்னதாக இப்படத்தின் முதல் ட்ரெய்லரை கடந்த செப்டம்பர் மாதம் படக்குழு வெளியிட்டது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Oct 2024 16:21 PM

நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்’ படத்தின் இரண்டாவது ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சார்’. இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் முன்னதாக வெளியாகி கவனத்தைப் பெற்றது. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உருவாகி உள்ள ‘சார்’ படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இந்தநிலையில் முன்னதாக இப்படத்தின் முதல் ட்ரெய்லரை கடந்த செப்டம்பர் மாதம் படக்குழு வெளியிட்டது. அந்த ட்ரெய்லரைப் பார்க்கும் போது கல்வி மறுக்கப்படும் மக்களின் கல்விக்காக போராடும் நபராக சரவணனும் விமலும் நடித்துள்ளது தெரிந்தது.அந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இந்த நிலையில் படம் நாளை 18-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இரண்டாவது ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கல்வி மறுக்கப்படும் பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்கும் விதமாக படக் எடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது. மேலும் படத்தின் மூன்று தலைமுறைகளாக ஆசிரியர்களாக உள்ளவர்கள் குறித்து படம் அமைந்துள்ளது தெரிகிறது.

Latest Stories