5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விஜயின் ’கோட்’ படத்திலிருந்து வெளியான “ஸ்பார்க்” பாடல்!

தளபதி விஜயின் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ல் வெளியான திரைப்படம் "தி கோட்". இப்படத்தின் "ஸ்பார்க்" வீடியோ பாடலை இப்படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வ்ருஷா பாலு இணைந்து பாடியுள்ளனர். இந்நிலையில் வெளியான இப்பாடல் இணையத்தில் புயலாகப் பரவி வருகிறது.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 16 Oct 2024 16:04 PM

ஸ்பார்க் வீடியோ பாடல் : தமிழ் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மற்றும் ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் தி கோட். இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா என பல தமிழ் நடிகர்கள் நடித்திருந்தனர். ஆக்ஷன், காமெடி, டைலாக் டெலிவரி என நடிகர் விஜய் மாசாகக் கோட் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 5ல் வெளியான இந்த திரைப்படம் வசூல் வேட்டையில் சுமார் “455 கோடிகளுக்கு” மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸியில் சாதனை செய்துள்ளது.

தளபதியின் 68வது திரைப்படமாக அமைந்த இப்படத்திற்காக இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இவரின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் இணையத்தில் ஹிட்டாகி வந்த நிலையில் தற்போது “ஸ்பார்க்” வீடியோ பாடலை இப்படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வ்ருஷா பாலு இணைந்து பாடியுள்ளனர். இந்நிலையில் வெளியான இப்பாடல் இணையத்தில் புயலாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க :‘வேட்டையன்’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வெளியான தகவல்!

Latest Stories