அதகளப்படுத்தும் ‘கோட்’ ட்ரெய்லர்… யூடியூபில் 40 மில்லியன் பார்வைகளை கடந்தது! - Tamil News | Actor vijays The GOAT Official Trailer Tamil got 42 million views in youtube for last 3 days | TV9 Tamil

அதகளப்படுத்தும் ‘கோட்’ ட்ரெய்லர்… யூடியூபில் 40 மில்லியன் பார்வைகளை கடந்தது!

Published: 

20 Aug 2024 19:37 PM

The GOAT (Official Trailer) Tamil: கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக கசிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு கடந்த 17-ம் தேதி வெளியிட்டது.

Follow Us On

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் ட்ரெய்லர் கடந்த 17-ம் தேதி வெளியான நிலையில் 3 நாட்களில் யூடியூபில் அதிக பார்வைகளைப் பெற்றுள்ளது. நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப் படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக கசிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு கடந்த 17-ம் தேதி வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது வரை தமிழ் ட்ரெய்லர் 42 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதனைப் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

சியா விதையில் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?
மாதுளை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
உடலுக்கு நீர்ச்சத்துடன் நார்ச்சத்தை வழங்கும் முள்ளங்கி.. பலன்கள் ஏராளம்..!
சர்வதேச கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை எப்படி..?
Exit mobile version