5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Sir Movie: சார் படத்திலிருந்து வெளியான பனங்கருக்கா பாடல் இதோ..!

Sir : நடிகர் விமல் முன்னணி கதாபாத்திரமாக நடித்து வெளியான திரைப்படம் சார். சின்னத்திரை நடிகரான போஸ் வெங்கட்டின் இயக்கத்தில் மற்றும் சிராஜ் எஸ், நிலோபர் சிராஜ் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில் தற்போது "பனங்கருக்கா" என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 24 Oct 2024 07:00 AM

பனங்கருக்கா வீடியோ பாடல்: பிரபல சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமாகி பின் வெள்ளித்திரையில் துணை கதாபாத்திரங்களில் நடித்துவருபவர் போஸ் வெங்கட். இவரின் இயக்கத்தில் கன்னி மாடம் என்ற திரைப்படம் கடந்த 2020ல் வெளியான நிலையில் தற்போது அடுத்த திரைப்படமாக நடிகர் விமலை வைத்து இந்த “சார்” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரமாக விமல், சாயாதேவி, சிராஜ் எஸ், சரவணன், ரமா மற்றும் ஜெயபாலன் ஆகியோர் நடித்துள்ளனர் இத்திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் க்ராஸ்ரூட் பிலிம் கம்பெனி இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது. நடிகர் விமலின் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுவருகிறது. இந்த சார் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்புகளைப் பெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்திலிருந்து “பனங்கருக்கா” என்ற வீடியோ பாடலை வெளியிட்டுள்ளனர். இப்பாடலைப் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி என இருவரும் இனைந்து பாடியுள்ளனர்.

 

Latest Stories