5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
யோகிபாபு நடிக்கும் குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் டீசர் இதோ..!

யோகிபாபு நடிக்கும் குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் டீசர் இதோ..!

barath-murugan
Barath Murugan | Published: 14 Dec 2024 21:43 PM

Kuzhanthaigal Munnetra Kazhagam Movie: தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவையான கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் யோகிபாபு. தற்போது இவர் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் குழந்தைகள் முன்னேற்றக் கழகம் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் தயாள் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் குழந்தைகள் முன்னேற்றக் கழகம். நடிகர்கள் செந்தில் மற்றும் யோகிபாபுவின் முன்னணி நடிகர்களாக இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தினை அருண்குமார் சம்பந்தம் மற்றும் இயக்குநர் ஷங்கர் தயாள் இணைந்து மீனாட்சி மூவிஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்து வருகின்றனர். இப்படத்தில் நடிகர் யோகிபாபுவுடன் செந்தில், அகல்யா, இமய வர்மன், அத்வைத் ஜெய் மஸ்தான், ஹரிகா பெத்தாதா மற்றும் பவாஸ் என் பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாதக பறவைகள் சங்கர் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இவர் இசையமைத்த இப்படத்தில் முக்கிய பாடல் ஒன்றை நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியுள்ளார். நடிகர் யோகிபாபுவின் நடிப்பில் கோலமாவு கோகிலா மற்றும் கூர்கா போன்ற திரைப்படங்கள் பெருமளவு வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இப்படத்திலும் இவர் முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

முற்றிலும் நகைத்தவை கதைக்களத்துடன், அரசியலும் இணைந்து உருவாகிவரும் இப்படத்தின் டீசரை நடிகர் கார்த்திக் வெளியிட்டார். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:மீண்டும் இணையும் செல்வராகவன் -ஜிவி பிரகாஷ்.. மேஜிக் நிகழுமா?