யோகி பாபுவின் ‘BOAT’ படத்தின் ட்ரெய்லர் இதோ! - Tamil News | Actor Yogi Babus Boat Movie official trailer out now | TV9 Tamil

யோகி பாபுவின் ‘BOAT’ படத்தின் ட்ரெய்லர் இதோ!

Published: 

26 Jul 2024 18:28 PM

Boat - Official Trailer | இந்தப் படத்தில் யோகி பாபு உடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி இது திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘போட்’ படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு தற்போது நடித்துள்ள படம் போட். தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டு மக்களின் பேவரைட் காமெடி நடிகனாக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. ஆரம்பத்தில் காமெடி நடிகனாக வலம் வந்த யோகி பாபு, அதன் பின் படத்தின் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கினார். இந்தப் படத்தில் யோகி பாபு உடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி இது திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. படம் 1943-ம் ஆண்டு நடைபெறுவது போன்று காட்டப்படுகின்றது. ஒரு போட்டில் இந்து, முஸ்லிம், கிருஸ்டியன் என மூன்று மதத்தினரும் நடு கடலில் மாட்டிக் கொள்வது போலவும் அவர்களுடன் ஒரு ஆங்கிலேய அதிகாரி இருப்பது போன்றும் அதில் காட்டப்படுகின்றது. சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் அந்த காலக் கட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை காமெடி கலந்து பேசுகின்றனர். இது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?
46 ரன்களுக்கு ஆல் அவுட்.. மோசமான சாதனை படைத்த இந்திய அணி..!