’கோழிப்பண்ணை செல்லத்துரை’ படத்திலிருந்து “ஏலே ஏலே” வீடியோ பாடல்! - Tamil News | Actor Yogi Babu Kozhipannai Chelladurai Movie Yele Yele Video Song Out Now | TV9 Tamil

’கோழிப்பண்ணை செல்லத்துரை’ படத்திலிருந்து “ஏலே ஏலே” வீடியோ பாடல்!

Published: 

14 Oct 2024 08:10 AM

Yeley Yeley Video Song : நடிகர் யோகி பாபுவின் மாறுபட்ட நடிப்பில் வெளியான திரைப்படம் "கோழிப்பண்ணை செல்லத்துரை". இந்த திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் "விஷன் சினிமா" என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இந்த திரைப்படத்திலிருந்து "ஏலே ஏலே" என்ற படலானது என்.ஆர்.ரகுநந்தன் இசையமைப்பில் வெளியாகியுள்ளது.

தமிழ் பிரபல இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இந்த கோழிப்பண்ணை செல்லத்துரை. இத்திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரபல நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகரான யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் துணை கதாபாத்திரங்களாக நடிகை ஐஸ்வர்யா தத்தா ,பிரிகிதா, ஏகம் போன்ற நடிகர்கள் நடிப்பில் கடந்த செப்டம்பர் 20ல் வெளியாகியது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான “விஷன் சினிமா” தயாரித்துள்ளது. தற்போது இந்த திரைப்படத்திலிருந்து “ஏலே ஏலே”என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க :சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தின் முதல் பாடல் வெளியானது!

வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
தண்ணீரின்றி உயிர் வாழும் பாலைவன விலங்குகள் என்னென்ன?
உங்களைச் சுற்றி மகிழ்ச்சியான உறவுகளை உருவாக்குவது எப்படி?
மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் அப்துல் கலாமின் பொன்மொழிகள்...!