5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aindham Vedham: ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற சாய் தன்ஷிகாவின்”ஐந்தாம் வேதம்” ட்ரெய்லர்!

Aindham Vedham Trailer :தமிழ் பிரபல நடிகை தன்ஷிகா மற்றும் சந்தோஷ் நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் ஐந்தாம் வேதம்.இயக்குநர் எல்.நாகராஜன் இயக்கத்தில் ஜீ ஒரிஜினல் தயாரித்து வருகிறது. துணை கதாபாத்திரங்களாக விவேக் ராஜகோபால், ஒய்.ஜி. மகேந்திரன், கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணம் எனப் பலரும் நடித்துவருகின்றனர். இந்த திரைப்படமானது வருகின்ற அக்டோபர் 25ல் வெளியாக உள்ள நிலையில் இப்படக்குழு படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளது.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 19 Oct 2024 18:39 PM

ஐந்தாம் வேதம் : தமிழ் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தன்ஷிகா. தற்போது  நீண்ட இடைவேளைக்குப் பிறகு இவரின் இவரது நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ஐந்தாம் வேதம். இதில் தன்ஷிகாவுடன் முக்கிய கதாபாத்திரமாக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் நாகராஜன் இயக்கத்தில் பிரபல ஓடிடி நிறுவனமான ஜீ 5 ஒரிஜினல் தயாரித்துள்ளது. இந்த ஐந்தாம் வேதம் திரைப்படத்தில் துணை நடிகர்களாக விவேக் ராஜகோபால், ஒய்.ஜி. மகேந்திரன்,மேத்யூ வர்கீஸ், கிரிஷா குருப், ராம்ஜி, பொன்வண்ணன், தேவதர்ஷினி எனப் பல திரைப் பிரபலங்கள் நடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட அமானுஷ்யம், த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் போன்ற கதைக்களத்தில் உருவாகிவரும் இத்திரைப்படத்திற்காக ரேவா இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது வருகின்ற அக்டோபர் 25ல் ஜீ5 என்ற ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் இப்படக்குழு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் டாப் சீரியல்கள் இதுதானா? லிஸ்ட் இதோ..!

Latest Stories