5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நடிகை சாய் தன்சிகாவின் ‘ஐந்தாம் வேதம்’ திரைப்படத்தின் டீசர் இதோ..!

Aindham Vedham : தமிழ்த் திரைப்பட பிரபல நடிகர்கள் சாய் தன்சிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய்.ஜி. மகேந்திரன், கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணம் போன்றவர்களின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் "ஐந்து வேதம்". தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 12 Oct 2024 21:26 PM

ஐந்தாம் வேதம் : தமிழ்த் திரைப்பட இயக்குநர் எல். நாகராஜன் இயக்கத்தில் மற்றும் ஜீ ஒரிஜினல் தயாரிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் “ஐந்தாம் வேதம்”. இந்த திரைப்படத்தில் நடிகை சாய் தன்சிகா மற்றும் சந்தோஷ் பிரதாப் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் துணை நடிகர்களாக விவேக் ராஜகோபால், ஒய்.ஜி. மகேந்திரன், கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணம் போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராக ரேவா இசையமைத்துள்ளார். இந்த ஐந்தாம் வேதம் திரைப்படம் ஆக்ஷன், திரில்லர் மற்றும் அமானுஷ்யம் போன்ற கதைக்களத்தை உள்ளடக்கிய திரைப்படமாக உருவாக்கி வருகிறது. தற்போது இந்த திரைப்படத்தின் டீசரை இப்படக்குழு வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 25ல் ஜீ5ல் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க :யார் இந்த ரஜினிகாந்த்? இவரின் திரைப்படங்கள் வெற்றியடைய காரணம் என்ன..?

Latest Stories