‘லப்பர் பந்து’ படத்திலிருந்து ‘சில்லாஞ்சிருக்கியே’ வீடியோ பாடல்! - Tamil News | Chillanjirukkiye Video Song From Lubber Pandhu Movie Out Now | TV9 Tamil

‘லப்பர் பந்து’ படத்திலிருந்து ‘சில்லாஞ்சிருக்கியே’ வீடியோ பாடல்!

Published: 

17 Sep 2024 22:36 PM

Chillanjirukkiye Video Song : நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ”லப்பர் பந்து”. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ”தமிழரசன் பச்சமுத்து” இயக்கியுள்ளார். இத்திரைப்படமானது தமிழ் விளையாட்டு நகைச்சுவை கலந்த கதையாகும். இப்படத்தில் ஹரீஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Follow Us On

நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ”லப்பர் பந்து” இப்படத்தின் முதல் பாடலான ”சில்லாஞ்சிருக்கியே” என்ற லிரிக்கல் பாடலை போன வருடமே வெளியிட்டிருந்த நிலையில் இப்படக்குழு தற்போது இப்படத்தின் வீடியோ பாடலை வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படத்தை இயக்கியவர் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து. இத்திரைப்படமானது கிரிக்கெட் விளையாட்டு மற்றும் நகைச்சுவை கலந்த கதையாக உருவாகியுள்ளது. ஹரீஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வதந்தி புகழ் சஞ்சனா, ஸ்வாசிகா விஜய், பால சரவணன், காளி வெங்கட் மற்றும் பலரும் பிரபலங்களும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ”சீன் ரோல்டன்” இசையமைத்துள்ளார். இப்படத்தை ”பிரின்ஸ் பிக்சர்ஸ்” தயாரித்துள்ளது. இத்திரைப்படமானது வரும் செப்டம்பர் 20ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version