“யூஐ” திரைப்படத்திலிருந்து வெளியான வார்னர் வீடியோ..!

Published: 

02 Dec 2024 20:22 PM

UI Movie : கன்னட திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் என திரைத்துறையைக் கலக்கி வருபவர் உபேந்திர ராவ். தற்போது இவரின் இயக்கத்திலும், நடிப்பிலும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் "யூஐ". மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகிவரும் இந்த திரைப்படத்திலிருந்து வார்னர் வீடியோ வெளியாகியுள்ளது.

கன்னட திரைப்பட உதவி இயக்குநராகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின் பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் மற்றும் தற்போது அரசியல்வாதியாகவும் இருந்துவருபவர் உபேந்திர ராவ். கன்னட சினிமாவில் இவரே திரைப்படங்களை இயக்கி, பின் அந்த திரைப்படங்களில் இவரே கதாநாயகனாக நடிப்பதில் மிகவும் பிரபலமானவர். தற்போது இவரின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் “யூஐ தி மூவி”. பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் லஹரி ஃபிலிம்ஸ் மற்றும் வீனஸ் என்டர்டெய்னர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். நடிகர் உபேந்திர ராவ் உடன் இந்த திரைப்படத்தில் ரீஷ்மா நானையா , முரளி ஷர்மா , சன்னி லியோன் , ஜிஷு சென்குப்தா , நிதி சுப்பையா , சாது கோகிலா மற்றும் முரளி கிருஷ்ணா எனப் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் வருகின்ற டிசம்பர் 20தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இயற்கைக்கு அப்பாற்பட்ட கதைகளுடன் உருவாகியுள்ள இந்த படம் திமில், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க :33 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல இயக்குநருடன் இணையும் நடிகர் ரஜினி?

இணையத்தில் வைரலாகும் சித்தார்த் – அதிதி ராவ் தம்பதியின் போட்டோஸ்
நீல நிற புடவையில் நடிகை அனிகா... வைரலாகும் போட்டோஸ்
நடிகை அனுபமா பரமேஷ்வரனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!
நடிகை ரஜிஷா விஜயன் பற்றிய சுவாரஸ்ய தகவல்..