5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

‘வாழை’ படத்திலிருந்து வெளியானது “தென்கிழக்கு” வீடியோ பாடல்..!

Thenkizhakku Video Song : இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் "டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்" தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 23ல் இந்த திரைப்படமானது வெளியானது. இத்திரைப்படத்தில் நடிகர் கலையரசன்,நிகிலா விமல், திவ்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 03 Oct 2024 15:57 PM

தனது வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம் “வாழை”. இத்திரைப்படத்தில் நடிகர் கலையரசன், நடிகை நிகிலா விமல் மற்றும் திவ்யா துரைசாமி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். மாரி செல்வராஜின் கிராம வாழ்க்கை கதையைக் கருவாகக் கொண்டு வெளியான இந்த திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இப்படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் ஏற்கெனவே “ஒரு ஊருல ராஜா” என்ற வீடியோ பாடல் கடந்த மாதம் வெளியான நிலையில் தற்போது “தென்கிழக்கு” என்ற வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த பாடலை பிரபல பாடகியான தீக்ஷிதா பாடியுள்ளார்.

Follow Us
Latest Stories