‘வாழை’ படத்திலிருந்து வெளியானது “தென்கிழக்கு” வீடியோ பாடல்..! - Tamil News | Diretor Mari Selvaraj Vaazhai Movie Thenkizhakku Video Song Out Now | TV9 Tamil

‘வாழை’ படத்திலிருந்து வெளியானது “தென்கிழக்கு” வீடியோ பாடல்..!

Published: 

03 Oct 2024 15:57 PM

Thenkizhakku Video Song : இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் "டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்" தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 23ல் இந்த திரைப்படமானது வெளியானது. இத்திரைப்படத்தில் நடிகர் கலையரசன்,நிகிலா விமல், திவ்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Follow Us On

தனது வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம் “வாழை”. இத்திரைப்படத்தில் நடிகர் கலையரசன், நடிகை நிகிலா விமல் மற்றும் திவ்யா துரைசாமி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். மாரி செல்வராஜின் கிராம வாழ்க்கை கதையைக் கருவாகக் கொண்டு வெளியான இந்த திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இப்படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் ஏற்கெனவே “ஒரு ஊருல ராஜா” என்ற வீடியோ பாடல் கடந்த மாதம் வெளியான நிலையில் தற்போது “தென்கிழக்கு” என்ற வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த பாடலை பிரபல பாடகியான தீக்ஷிதா பாடியுள்ளார்.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version