Fanatics : சினிமாவும் ரசிகர்களும்.. அலசி ஆராயும் ஆவணப்படம்!

| Dec 04, 2024 | 6:17 PM

ஆரம்ப காலக்கட்டத்தில் வில்லனாக தொடர்ந்து நடித்த ரஜினி பின்னர் நாயகனாக நடித்து தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டார். சுமார் 175 படங்களில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் ரஜினி.

தமிழ் சினிமா, இந்திய சினிமா மட்டும் இன்றி உலகில் பல்வேறு நாடுகளில் ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஒரு சாதாரண பஸ் கண்டக்டர் உலகம் போற்றும் நடிகராக மாறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ரஜினியின் உண்மையான பெயர் சிவாஜி ராவ். இவரை நடிகராக கண்டெடுத்தது இயக்குநர் பாலசந்தர்தான். ஆரம்ப காலக்கட்டத்தில் வில்லனாக தொடர்ந்து நடித்த ரஜினி பின்னர் நாயகனாக நடித்து தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டார். சுமார் 175 படங்களில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் ரஜினி. ரசிகர்கள் என்பதை தாண்டி பக்தர்கள் என்றே கூறலாம். ரஜினியை நடிகராக பார்க்காமல் கடவுளாக பார்க்கும் ரசிகர்களும் உள்ளனர். இந்த நிலையில் ரஜினி தனது 74-வது பிறந்த நாளை வரும் 12-ம் தேதி கொண்டாட உள்ளார்.

இந்த நிலையில் டிவி 9 நிறுவனம் ரஜினி மட்டும் இன்றி தென் இந்திய சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களை ரசிகர்கள் எந்த அளவிற்கு கொண்டாடுகின்றனர் என்பதை விளக்கும் வகையில் ஒரு ஆவணப் படத்தை எடுத்துள்ளது. அது தொடர்பான ஆவணப் படம் வரும் 7-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதில் ரசிகரக்ள் என்று இல்லாமல் வெரியர்கள் என்று இந்த ஆவணப் படத்திற்கு பெயர் வைத்துள்ளர். சாதரண ரசிகர் என்பவர் தனக்கு பிடித்த நடிகரின் படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அதனை பார்க்க விரும்புவார்கள். ஆனால் வெறியர்கள் என்று குறிப்பிடப்படும் இவர்கள் சினிமா என்பதை தாண்டி தங்களது சொந்த வாழ்க்கையிலும் அந்த நடிகருக்கான என்ன வேண்டுமானாலும் செய்பவர்களாக இருப்பார்கள்.

குறிப்பாக தங்களுக்கு பிடித்த நடிகரின் பெயர் அல்லது புகைப்படத்தை உடலில் பச்சையாக குத்திக்கொள்வது. அந்த நடிகரைப் போல தங்களது பாவனைகளை மாற்றிக்கொள்வது மட்டும் இன்றி அவர்களுக்காக கடினமான வேண்டுதல்களை செய்யவும் தயங்காதவர்கள். இவர்களை குறித்த ஆவணப் படம் தான் வருகின்ற டிசம்பர் 7-ம் தேதி வெளியாகவுள்ளது.

Published on: Dec 04, 2024 05:39 PM