எழுத்து.. இயக்கம்.. தயாரிப்பு.. இசை – ஹிப்ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’ கிளிம்ஸ் வீடியோ இதோ! - Tamil News | Glimpse of Kadaisi Ulaga Por movie starred Hiphop Tamizha Adhi | TV9 Tamil

எழுத்து.. இயக்கம்.. தயாரிப்பு.. இசை – ஹிப்ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’ கிளிம்ஸ் வீடியோ இதோ!

Published: 

19 Jul 2024 19:02 PM

Glimpse of Kadaisi Ulaga Por | தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், கதையின் நாயகனாகவும் அறிமுகமான நடிகர் ஆதி, அதற்கு முன்னதாகவே பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அடுத்து 2021-ல் ‘சிவகுமாரின் சபதம்’ என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கினார். தற்போது அவர் மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ‘கடைசி உலகப் போர்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

Follow Us On

ஆல்பம் பாடல்கள் மூலமும் தமிழ் ராப் பாடல்கள் மூலமும் இளைஞர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் இசையமைப்பாளர் ஹிப் ஹாஃப் ஆதி. தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், கதையின் நாயகனாகவும் அறிமுகமான நடிகர் ஆதி, அதற்கு முன்னதாகவே பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அடுத்து 2021-ல் ‘சிவகுமாரின் சபதம்’ என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கினார். தற்போது அவர் மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ‘கடைசி உலகப் போர்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இசை அமைப்பாளர், நடிகர் இயக்குநர் என தனது திறமைகளை வெளிப்படுத்தி, அதில் வெற்றியும் பெற்று வருகின்றார். நேற்று மாலை 6 மணி அளவில், கடைசி உலகப் போர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். மேலும் தற்போது இந்த படம் தொடர்பான கிளிம்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version