5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

The Goat: விஜய் – பவதாரணி குரலில் இணையத்தில் கவனம் பெறும் ‘தி கோட்’ பட பாடல்!

Chinna Chinna Kangal (Lyrical) | இந்தப் படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடைசியாக விஜய்யின் புதிய கீதை படத்துக்கு இசையமைத்த யுவன், அதன் பின்னர் சுமார் 21 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யுடன் இணைந்திருக்கிறார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Jun 2024 07:02 AM

’தி கோட்’ படத்திலிருந்து நடிகர் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரணி குரலில் வெளியான பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப் படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடைசியாக விஜய்யின் புதிய கீதை படத்துக்கு இசையமைத்த யுவன், அதன் பின்னர் சுமார் 21 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யுடன் இணைந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று விஜயின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு படத்தில் இருந்து இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டது. ’சின்ன சின்ன கண்கள்’ எனத் தொடங்கும் இந்தப் பாடல் நடிகர் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரணி குரலில் வெளியாகி இணையத்தில் தற்போதுவரை 3 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. பாடகி பவதாரணி சமீபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குரல் ஏஐ மூலம் இந்த பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Follow Us
Latest Stories