’மெய்யழகன்’ படத்திலிருந்து வெளியானது ‘கொலுசு’ வீடியோ பாடல் - Tamil News | Golusu song from Actor Karthis Meiyazhagan Movie out now | TV9 Tamil

’மெய்யழகன்’ படத்திலிருந்து வெளியானது ‘கொலுசு’ வீடியோ பாடல்

Published: 

24 Oct 2024 11:52 AM

Golusu | மெய்யழகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதில் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா மற்றும் தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி நடிப்பில் வெளியான ‘மெய்யழகன்’ படத்திலிருந்து ‘கொலுசு’ பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் பிரேம் குமார். இவர் அடுத்ததாக கார்த்தியின் 27-வது படத்தை இயக்கியுள்ளார். மெய்யழகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதில் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா மற்றும் தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படம் கடந்த மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்திலிருந்து ‘கொலுசு’ பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்?
சியா விதைகளுடன் இந்த உணவுகளை ஒரு போதும் சேர்க்கக்கூடாது..!
இந்தியாவில் வெளிநாட்டு பயணிகள் அதிகம் செல்லும் இடங்கள்!
சமைக்கும்போது செய்யக்கூடாத தவறுகள்..!