‘கடைசி உலகப் போர்’ படத்திலிருந்து வெளியானது வீடியோ பாடல்! - Tamil News | I am A Beast Music Video song from Kadaisi Ulaga Por movie out now | TV9 Tamil

‘கடைசி உலகப் போர்’ படத்திலிருந்து வெளியானது வீடியோ பாடல்!

Published: 

31 Oct 2024 16:21 PM

I am A Beast - Music Video | தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், கதையின் நாயகனாகவும் அறிமுகமான நடிகர் ஆதி, அதற்கு முன்னதாகவே பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அடுத்து 2021-ல் ‘சிவகுமாரின் சபதம்’ என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கினார். தற்போது அவர் மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ‘கடைசி உலகப் போர்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

ஹிப் ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’ படத்திலிருந்து ஐ அம் தி பீஸ்ட் பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ஆல்பம் பாடல்கள் மூலமும் தமிழ் ராப் பாடல்கள் மூலமும் இளைஞர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி. தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், கதையின் நாயகனாகவும் அறிமுகமான நடிகர் ஆதி, அதற்கு முன்னதாகவே பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அடுத்து 2021-ல் ‘சிவகுமாரின் சபதம்’ என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கினார். தற்போது அவர் மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ‘கடைசி உலகப் போர்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தில் நாசர், நட்டி , அனகா, அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் ஐ அம் தி பீஸ்ட் பாடலைத் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

தீபாவளி கொண்டாடிய ஸ்ரேயாவின் போட்டோஸ்
ஹோம்லி லுக்கில் நடிகை அனிகா... வைரலாகும் போட்டோ
ஊறவைத்த வெந்தயத்தை காலையில் சாப்பிட்டால் இத்தனை பலன்களா?
இஞ்சி ஏன் உணவில் சேர்க்க வேண்டும்?