ஜெயம் ரவி – பிரியங்கா மோகனின் ‘ப்ரதர்’ கிளிம்ஸ் வீடியோ இதோ! - Tamil News | Jayam Ravis Brother movie glimpse video out now | TV9 Tamil

ஜெயம் ரவி – பிரியங்கா மோகனின் ‘ப்ரதர்’ கிளிம்ஸ் வீடியோ இதோ!

Published: 

07 Jul 2024 10:37 AM

Brother - Announcement Video | ப்ரதர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், ‘கேஜிஎஃப்’, ‘புஷ்பா’ புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Follow Us On

நடிகர் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் ‘ப்ரதர்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக இருக்கும் ஜெயம் ரவிக்கு கடந்த சில காலங்களாக படங்கள் பெரியதளவில் வெற்றியை தேடி தரவில்லை. குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் வெளிவந்த இறைவன், சைரன் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இயக்குநர் ராஜேஷ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார் ஜெயம் ரவி. ’ப்ரதர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், ‘கேஜிஎஃப்’, ‘புஷ்பா’ புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் கிளம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறிகள்..!
நெல்லிக்கனி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
Exit mobile version