5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஒரே படத்தில் இணைந்த மெகா கூட்டணி… ‘மனோரதங்கள்’ ட்ரெய்லர் இதோ!

Manorathangal - Official Trailer | இந்த ஆந்தாலஜி சீரிஸில் இடம்பெற்றுள்ள 9 கதைகளையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். அதேபோல், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், மெகா ஸ்டார் மம்முட்டி, ஃபஹத் பாசில், ஆசிப் அலி, பிஜு மேனன், ஹரீஷ் உத்தமன், சித்திக், பார்வதி, இந்திரஜித் சுகுமாரன், நதியா, அபர்ணா பாலமுரளி, மது, சித்திக், இந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 17 Jul 2024 11:58 AM

மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் பாசில் இவர்களுடன் கமல் இணைந்துள்ள ‘மனோரதங்கள்’ ஆந்தாலஜி ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழில் மல்டி ஸ்டார்களின் கூட்டணி என்பது அரிதான விசயமாகவே இருக்கும். ஆனால் மலையாளத்தில் அப்படி அல்ல எவ்வளவு பெரிய ஸ்டார் அந்தஸ்து உள்ள நடிகராக இருந்தாலும் எந்த ஈகோவும் இல்லாமல் மற்ற ஒரு நடிகரின் படத்தில் சின்ன வேடத்தில் நடிப்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில் மலையாளத்தின் மூத்த எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநர் எம்.டி.வாசுதேவன் நாயரைக் கொண்டாடும் விதமாகவும், அவருக்கு மரியாதை செய்யும் வகையிலும் இந்த ஆந்தாலஜி உருவாகியுள்ளது.

இந்த ஆந்தாலஜி சீரிஸில் இடம்பெற்றுள்ள 9 கதைகளையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். அதேபோல், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், மெகா ஸ்டார் மம்முட்டி, ஃபஹத் பாசில், ஆசிப் அலி, பிஜு மேனன், ஹரீஷ் உத்தமன், சித்திக், பார்வதி, இந்திரஜித் சுகுமாரன், நதியா, அபர்ணா பாலமுரளி, மது, சித்திக், இந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள மனோரதங்கள் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Follow Us
Latest Stories