‘அமரன்’ படத்திலிருந்து வெளியானது ‘கனவே’ வீடியோ பாடல்!
Kanave - Video Song | அமரன் படம் கடந்த அக்டோபர் 31-ம் தேதி கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து ‘கனவே’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அமரன் படத்திலிருந்து வீடியோ பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21-வது படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்திற்கு ‘அமரன்’ என்று பெயர் வைத்தனர். சோனி பிக்சர்ஸுடன் இணைந்து இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்தது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கினர். தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி வெளியானது. இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து ‘கனவே’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.