5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

’ராமம் ராகவம்’ படத்திலிருந்து கொல சாமி பாடலின் லிரிக் வீடியோ இதோ

Kola Saami Poala Lyrical Video | தற்போது சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் தன்ராஜ் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகியுள்ளது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான குல சாமி போல என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Sep 2024 16:28 PM

சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமம் ராகவம்’ படத்திலிருந்து முதல் சிங்கிள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சின்னத்திரையில் இயக்குநராக அறிமுகமாகி பின்பு வெள்ளித்திரையில் இயக்குநர் ஆனவர் சமுத்திரகனி. வெள்ளித்திரையில் இயக்குநராக சில படங்களை இயக்கிய பின் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். பின்னர் வில்லன் உள்ளிட்ட முக்கிய கதாப்பாத்திரங்களிலும் தனது நடிப்பை வெளிபடுத்தி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். தற்போது சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் தன்ராஜ் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகியுள்ளது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான குல சாமி போல என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை யுகபாரதி வரிகளில் ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பாடியுள்ளார். படத்திற்கு அருண் சிலுவேரு இசையமைத்துள்ளார்.

Follow Us
Latest Stories