5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரஜினியின் ‘வேட்டையன்’ படத்திலிருந்து வெளியானது ‘மனசிலாயோ’ வீடியோ பாடல்

Manasilaayo Video | 27 வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார். அவரது குரலை ஏ.ஐ தொழில் நுட்ப உதவியுடன் மீண்டும் உயிர் பெற செய்துள்ளனர். இப்பாடலில் மலையாள வரிகளும் இடம் பெற்றுள்ளது. படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Oct 2024 18:51 PM

நடிகர் ரஜினியின் வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் பாடலை பாடியுள்ளார். 27 வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார். அவரது குரலை ஏ.ஐ தொழில் நுட்ப உதவியுடன் மீண்டும் உயிர் பெற செய்துள்ளனர். இப்பாடலில் மலையாள வரிகளும் இடம் பெற்றுள்ளது. ஓனம் பண்டிகை ஸ்பெஷலாக இப்பாடலின் லிரிக்கள் வீடியோவை முன்னதாக படக்குழு வெளியிட்டது. பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் மனசிலாயோ பாடலின் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

Latest Stories