ரஜினியின் ‘வேட்டையன்’ படத்திலிருந்து வெளியானது ‘மனசிலாயோ’ வீடியோ பாடல் - Tamil News | Manasilaayo Video from Rajinikanths Vettaiyan movie | TV9 Tamil

ரஜினியின் ‘வேட்டையன்’ படத்திலிருந்து வெளியானது ‘மனசிலாயோ’ வீடியோ பாடல்

Published: 

28 Oct 2024 18:51 PM

Manasilaayo Video | 27 வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார். அவரது குரலை ஏ.ஐ தொழில் நுட்ப உதவியுடன் மீண்டும் உயிர் பெற செய்துள்ளனர். இப்பாடலில் மலையாள வரிகளும் இடம் பெற்றுள்ளது. படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

நடிகர் ரஜினியின் வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் பாடலை பாடியுள்ளார். 27 வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார். அவரது குரலை ஏ.ஐ தொழில் நுட்ப உதவியுடன் மீண்டும் உயிர் பெற செய்துள்ளனர். இப்பாடலில் மலையாள வரிகளும் இடம் பெற்றுள்ளது. ஓனம் பண்டிகை ஸ்பெஷலாக இப்பாடலின் லிரிக்கள் வீடியோவை முன்னதாக படக்குழு வெளியிட்டது. பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் மனசிலாயோ பாடலின் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகை சினேகாவிற்கு பிடித்த நடிகர் இவர்தான்!
மாஸ் ஹீரோதான் இந்தப் பையன்... யார் தெரியுதா?
தனிப்பட்ட வளர்ச்சிக்கு தேவையான முக்கிய விஷயங்கள்!
சகோதரியிடம் உடன்பிறப்புகள் கற்றுக்கொள்ளும் முக்கிய விஷயங்கள்!