5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vaazhai | மாரி செல்வராஜின் ‘வாழை’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இதோ!

Thenkizhakku - Lyric Video | முழுக்க முழுக்க சிறுவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படம். வாழை படம் முதலில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாவதாக இருந்தது. ஆனால் திரையரங்குகளில்தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இந்தச் சூழலில் படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியாகியிருக்கிறது. அது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Jul 2024 12:21 PM

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாழை’ படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை தக்க வைத்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான கர்ணன், மாமன்னன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார். துருவ் விக்ரமை வைத்து அடுத்ததாக பைசன் படத்தை இயக்கும் அவர்; இப்போது வாழை படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அந்தப் படம் முழுக்க முழுக்க சிறுவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படம். வாழை படம் முதலில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாவதாக இருந்தது. ஆனால் திரையரங்குகளில்தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இந்தச் சூழலில் படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியாகியிருக்கிறது. அது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

Latest Stories