5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மில்லியன் பார்வைகளை கடந்தது ‘ப்ரதர்’ பட பாடல் வீடியோ!

Medhakuthu Kaalu Rendum | ப்ரதர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், ‘கேஜிஎஃப்’, ‘புஷ்பா’ புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Oct 2024 19:48 PM

நடிகர் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் ‘ப்ரதர்’ படத்தின் வீடியோ பாடல் தற்போது மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக இருக்கும் ஜெயம் ரவிக்கு கடந்த சில காலங்களாக படங்கள் பெரியதளவில் வெற்றியை தேடி தரவில்லை. குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் வெளிவந்த இறைவன், சைரன் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இயக்குநர் ராஜேஷ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார் ஜெயம் ரவி. ’ப்ரதர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், ‘கேஜிஎஃப்’, ‘புஷ்பா’ புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் ‘மெதக்குது காலு ரெண்டும்’ பாடல் வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது. அது தற்போது யூடியூபில் மில்லியன் பார்வைகளைப் தற்போது பெற்றுள்ளது.

Latest Stories