5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Thangalaan: ஜி.வி.பிரகாஷ் இசையில் தங்கலான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இதோ!

Minikki Minikki - Lyrical Video(Tamil) | பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஞானவேல் ராஜா படத்தை தயாரித்துள்ளார்.  கோலார் தங்க சுரங்க மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. பழங்குடியினரை மையமாக வைத்தும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Jul 2024 04:09 AM

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ளா ‘தங்கலான்’ படத்திலிருந்து முதல் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ‘தங்கலான்’. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஞானவேல் ராஜா படத்தை தயாரித்துள்ளார்.  கோலார் தங்க சுரங்க மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. பழங்குடியினரை மையமாக வைத்தும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பா ரஞ்சித் செதுக்கியுள்ளார் என ட்ரெய்லரைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். படத்தின் வெளியீடு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. இந்த நிலையில் ஜிவி இசையில் படத்திலிருந்து முதல் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மினிக்கி மினிக்கி என்ற இந்த பாடல் செலிப்ரேஷன் தீமில் உருவாகியுள்ளது.  சிந்தூரி விஷால் குரலில் ஒலிக்கும் அப்பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow Us
Latest Stories