5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
சித்தார்த்தின் மிஸ் யூ படத்திலிருந்து வெளியானது ஸ்னீக் பீக் வீடியோ!

சித்தார்த்தின் மிஸ் யூ படத்திலிருந்து வெளியானது ஸ்னீக் பீக் வீடியோ!

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Dec 2024 00:06 AM

Miss You - Sneak Peek 02 - Tamil | படம் கடந்த நவம்பர் 29-ம் தேதி வெளியாக இருந்த நிலையில் புயல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதனை தொடர்ந்து படம் கடந்த 13-ம் தேதி வெளியான நிலையில் தற்போது படத்திலிருந்து இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மிஸ் யூ’ படத்திலிருந்து ஸ்னீக் பீக் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ‘சித்தா’ படத்தின் வெற்றியை தொடந்து நடிகர் சித்தார்த் நாயகனாக தற்போது நடித்திருக்கும் படம், ‘மிஸ் யூ’. இந்தப் படத்தை ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இயக்குகிறார். காதல், காமெடி, ஆக்‌ஷன் என முழுநீள எண்டெர்டெய்ன்மெண்ட் படமாக உருவாயிருக்கிறது. ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில். இவர்களுடன் பொன்வண்ணன், கருணாகரன், அனுபமா, நரேன், ரமா, பாலசரவணன், மாறன் என பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படம் கடந்த நவம்பர் 29-ம் தேதி வெளியாக இருந்த நிலையில் புயல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதனை தொடர்ந்து படம் கடந்த 13-ம் தேதி வெளியான நிலையில் தற்போது படத்திலிருந்து இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.