5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“நீ பொட்டு வச்ச” வெளியானது லப்பர் பந்து படத்தின் ஹிட் பாடல்!

Nee Pottu Vechcha Video : அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சை முத்து இயக்கத்தில் நடிகர்கள் ஹரீஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் இந்த "லப்பர் பந்து". இந்த திரைப்படத்தை "பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இந்த திரைப்படத்திலிருந்து "நீ பொட்டு வச்ச" என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

barath-murugantv9-com
Barath Murugan | Updated On: 05 Oct 2024 21:57 PM

தமிழ் பிரபல நடிகர்களான அட்டகத்தி தினேஷ் , ஹரீஷ் கல்யாண் போன்றவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தில் துணை நடிகர்களாக சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தேவதர்ஷினி மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது கடந்த செப்டம்பர் 20ல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தைச் சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இப்படத்திலிருந்து “நீ பொட்டு வச்ச” என்ற வீடியோ பாடலை இப்படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலானது நடிகர் விஜய் காந்த் நடிப்பில் 1989ல் வெளியான “பொன்மன செல்வன்” திரைப்படத்தில் வெளியான பாடலாகும். இந்த பாடலானது இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் வெளியாகியது. தற்போது இந்த பாடலை இப்படக்குழு ரீமேக் செய்து வெளியிட்டுள்ளது. தற்போது இந்த பாடலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :லப்பர் பந்து படத்திலிருந்து வெளியானது ‘ஆச ஒரவே’ வீடியோ பாடல்

Follow Us
Latest Stories