5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

‘ஹலோ மம்மி’ படத்திலிருந்து வெளியானது ‘நீயோ’ பாடல் வீடியோ!

Neeyo - Video Song | நடிகர் ஷரப் உதீன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் பிந்து பேனிக்கர், அஜு வர்கீஸ், ஜானி ஆண்டனி, ஜெகதீஷ்,  சன்னி இந்துஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான வைஷக் இளன்ஸ் இயக்கி உள்ளார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Dec 2024 20:56 PM

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் ஐஸ்வர்ய லட்சுமி. மருத்துவம் படித்த இவர் நடிப்பு துறையில் இருந்த ஆர்வம் காரணமாக சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். ஐஸ்வர்ய லட்சுமி கடந்த 2017-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மாயநதி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். 2019-ம் ஆண்டு வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் விஷ்னு விஷாலுடன் நடித்த ‘கட்டா குஸ்தி’ இவருக்கு மாஸ் என்ட்ரி கொடுத்தது. அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இவர் தற்போது ’ஹலோ மம்மி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகர் ஷரப் உதீன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் பிந்து பேனிக்கர், அஜு வர்கீஸ், ஜானி ஆண்டனி, ஜெகதீஷ்,  சன்னி இந்துஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான வைஷக் இளன்ஸ் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் இருந்து நீயோ எனற பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Latest Stories