நடிகர் விமலின் ‘சார்’ படத்திலிருந்து வெளியானது ‘புட்ட வச்ச’ பாடல் லிரிக் வீடியோ - Tamil News | Putta Vatcha Lyric Video song out from Actor Vemals SIR movie out now | TV9 Tamil

நடிகர் விமலின் ‘சார்’ படத்திலிருந்து வெளியானது ‘புட்ட வச்ச’ பாடல் லிரிக் வீடியோ

Updated On: 

25 Sep 2024 17:24 PM

Putta Vatcha Lyric Video - SIR | இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் முன்னதாக வெளியாகி கவனத்தைப் பெற்றது. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உருவாகி உள்ள ‘சார்’ படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

Follow Us On

நடிகர் விமல் நடித்துள்ள ‘சார்’ படத்தின் நான்காவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சார்’. இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் முன்னதாக வெளியாகி கவனத்தைப் பெற்றது. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உருவாகி உள்ள ‘சார்’ படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் படத்திலிருந்து 4-வது பாடலான ‘புட்ட வச்ச’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை நாட்டுப்புற பாடகர் ஆந்தைகுடி இளையராஜா எழுதி, அவரே பாடியுள்ளார்.

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
Exit mobile version