5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

‘வேட்டையன்’ படத்திலிருந்து ‘மனசிலாயோ’ பாடல்.. லிரிக்கல் வீடியோ!

vettaiyan song update: வேட்டையன் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களம் கையாளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கல்விக் கொள்கைக்கு ஆதரவான பல கருத்துக்களும் இந்த படத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

intern
Tamil TV9 | Updated On: 11 Sep 2024 10:45 AM

வேட்டையன் பட பாடல் : வேட்டையன் திரைப்படத்தின் முதல் பாடலான “மனசிலாயோ” என்ற லிரிக்ஸ் வீடியோ ஓணம் பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியாகியுள்ளது.  இப்பாடலை பிரபல பின்னணி பாடகரான மறைந்த “மலேசியா வாசுதேவன்” குரலை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலமாக அவரின் குரலுக்கு மீண்டும் உயிர்க்கொடுத்துள்ளார் அனிருத். சுமார் “27 வருடங்களுக்கு” பிறகு சுப்பர் ஸ்டார் ரஜினி படதிற்க்கு மலேசியா வாசுதேவன் குரலை ஏ.ஐ முலமாக கொண்டுவந்துள்ளனர் படக்குழுவினர். இந்த பாடலின் மலையாள வரிகளை அனிருத்தும் பாடியுள்ளர். ஆக்‌ஷன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகி இருக்கும் இப்படம், படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களம் கையாளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கல்விக் கொள்கைக்கு ஆதரவான பல கருத்துக்களும் இந்த படத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு வடமாநிலங்களில் பகுதிகளில் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.

 

Follow Us
Latest Stories