“முயற்சி செய்யாதவனுக்கு தோல்வி கூட கிடைக்காது” – ஒன் 2 ஒன் ட்ரெய்லர் இதோ! – Tamil News (தமிழ் செய்தி): Breaking Tamil Samachar, and Latest Tamil News Live | TV9 Tamil

“முயற்சி செய்யாதவனுக்கு தோல்வி கூட கிடைக்காது” – ஒன் 2 ஒன் ட்ரெய்லர் இதோ!

Published: 

30 Jun 2024 10:30 AM

One 2 One - Official Trailer | பாலிவுட்டில் மாஸ் இயக்குநரான அனுராக் கஷ்யப் தற்போது அதிக தமிழ் படங்களில் நெகட்டிவ் கதாப்பத்திரத்தில் நடித்து வருகிறார். இப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸாக கருதப்படுகிறது. இவர் இதற்கு முன் இமைக்கா நொடிகள், லியோ, விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா படத்திலும் முக்கிய வில்லனாக நடித்திருந்தார்.

Follow Us On

நடிகர் சுந்தர் சி நடிப்பில் உருவாகியுள்ள ஒன் 2 ஒன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது. நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை இயக்கிய திருஞானத்தின் இரண்டாம் படம் தான் ஒன் 2 ஒன். இந்தப் படத்தில் சுந்தர் சி, அனுராக் காஷ்யப் உடன் விஜய் வர்மன், நிது சந்திரா, ராகினி திவேதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். இப்படத்தை 24 Hours ப்ரோடக்‌ஷ்ன் நிறுவன தயாரித்துள்ளது. எஸ்கே.ஏ பூபதி கார்த்திக், பிரவீம் நித்யானந்தம், விக்ரம் மோகன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளது. பாலிவுட்டில் மாஸ் இயக்குநரான அனுராக் கஷ்யப் தற்போது அதிக தமிழ் படங்களில் நெகட்டிவ் கதாப்பத்திரத்தில் நடித்து வருகிறார். இப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸாக கருதப்படுகிறது. இவர் இதற்கு முன் இமைக்கா நொடிகள், லியோ, விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா படத்திலும் முக்கிய வில்லனாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் ஒன் 2 ஒன் படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது. அந்த ட்ரெய்லரில் “முயற்சி செய்யாதவனுக்கு தோல்வி கூட கிடைக்காது. தோல்வியே கிடைச்சாலும் முயற்சி செய்யாம விடமாட்டன்” போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Exit mobile version