5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அடிச்சு கெளப்பு… மஜா பன்னு… விஜய் வெளியிட்ட பிரசாந்தின் ‘அந்தகன்’ பாடல் இதோ!

The Andhagan Anthem Promo Song l இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அந்தகன்’ படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ளார். படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். இதில் இந்தியில் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். பல வருடங்கள் ஒதுங்கியிருந்த பிரசாந்த் அந்தகன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். படத்தில் நவரச நாயகன் கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரகனி உள்ளிட்டோரும் பிரசாந்த்துடன் நடித்திருக்கிறார்கள்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jul 2024 01:58 AM

நடிகர் பிரசாந்த நடிப்பில் உருவாகியுள்ள ‘அந்தகன்’ படத்தின் ‘அந்தகன் ஆன்தம்’ என்ற வீடியோவை நடிகர்கள் விஜய் மற்றும் பிரபுதேவா இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர். இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அந்தகன்’ படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ளார். படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். இதில் இந்தியில் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். பல வருடங்கள் ஒதுங்கியிருந்த பிரசாந்த் அந்தகன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். படத்தில் நவரச நாயகன் கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரகனி உள்ளிட்டோரும் பிரசாந்த்துடன் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிவடைந்து பல மாதங்கள் ஆன நிலையில் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. அந்த வகையில் படம் வருகின்ற ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

Follow Us
Latest Stories