‘லெவன்’ படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் பாடிய பாடல் இதோ! - Tamil News | The Devil is Waiting Tamil Lyrical video from eleven movie out now | TV9 Tamil

‘லெவன்’ படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் பாடிய பாடல் இதோ!

Published: 

18 Oct 2024 11:20 AM

The Devil is Waiting (Tamil) - Lyrical | இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி இருக்கும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் திரைப்படம் தான் 'லெவன்'. இப்படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான ‘லெவன்’ திரைப்படத்தை தங்களது மூன்றாவது படைப்பாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர். இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி இருக்கும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் திரைப்படம் தான் ‘லெவன்’. இப்படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார். டி. இமான் இசையமைத்துள்ள இப்பாடலை கமல்ஹாசனின் மகள் ஷ்ருதி ஹாசன் பாடியுள்ளார். ‘தி டெவில் இஸ் வெயிட்டிங்’ எனும் இப்பாடலின் வரிகளை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார் அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ்.

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?