ஹிப் ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’ படத்திலிருந்து ‘உனக்காக’ பாடல் இதோ! - Tamil News | unakaaga-song-from-hiphop-adhis-kadaisi-ulaga-por-movie-out-cinema-news-tamil | TV9 Tamil

ஹிப் ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’ படத்திலிருந்து ‘உனக்காக’ பாடல் இதோ!

Published: 

24 Aug 2024 12:29 PM

Unakaaga - Promo Music Video | தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், கதையின் நாயகனாகவும் அறிமுகமான நடிகர் ஆதி, அதற்கு முன்னதாகவே பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அடுத்து 2021-ல் ‘சிவகுமாரின் சபதம்’ என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கினார். தற்போது அவர் மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ‘கடைசி உலகப் போர்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

Follow Us On

ஹிப் ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’ படத்திலிருந்து 3- வது பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ஆல்பம் பாடல்கள் மூலமும் தமிழ் ராப் பாடல்கள் மூலமும் இளைஞர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி. தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், கதையின் நாயகனாகவும் அறிமுகமான நடிகர் ஆதி, அதற்கு முன்னதாகவே பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அடுத்து 2021-ல் ‘சிவகுமாரின் சபதம்’ என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கினார். தற்போது அவர் மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ‘கடைசி உலகப் போர்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தில் நாசர், நட்டி , அனகா, அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் 3-வது பாடல் வெளியாகி உள்ளது. படத்தின் “உனக்காக” 3-வது பாடலாக வெளியாகி உள்ளது.

சியா விதையில் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?
மாதுளை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
உடலுக்கு நீர்ச்சத்துடன் நார்ச்சத்தை வழங்கும் முள்ளங்கி.. பலன்கள் ஏராளம்..!
சர்வதேச கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை எப்படி..?
Exit mobile version