25 October 2024
Pic credit - freepik
Author : Mukesh
எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும், எப்போது குடிக்கக் கூடாது என்று பல விஷயங்கள் மனதில் ஓடினால் அதுகுறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
காலையில் எழுந்தவுடன் முதலில் செய்ய வேண்டியது தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலுக்கு ஆற்றலை தரும்.
உடற்பயிற்சி செய்த பிறகு போதுமான அளவு தண்ணீர் குடித்தால், அது உங்கள் இதயத் துடிப்பை சீராக்கும்.
சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன், பின்பும் தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும்.
நீங்கள் காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது அதிகளவு தண்ணீர் குடிப்பது நன்மை தரும்.
உடலில் நீர் போதுமான அளவு இல்லாதபோது சோர்வு ஏற்படும். அப்போது, அதிகளவில் தண்ணீர் குடிப்பது நல்லது.
உங்கள் உடலில் தண்ணீர் இல்லாதபோது நாக்கு வறட்சி, சோர்வு, பலவீனம் போன்றவை ஏற்படும்.