முடி உதிர்வை தடுக்கும் 7 வீட்டு சமையலறை பொருட்கள்..!

04 December 2024

Pic credit - freepik

Author : Mukesh 

      எண்ணெய்

வெதுவெப்பான தேங்காய் எண்ணெயை கொண்டு தலையை மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம் கூந்தல் வலுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

         கற்றாழை

கற்றாழை ஜெல்லை முடியின் வேர்களில் தடவி வந்தால், முடி உதிர்வு தடைப்படும்.

       வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள கந்தகமானது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

       வெந்தயம்

வெந்தயத்தை பேஸ்ட் போல்செய்து முடியின் வேர்களில் தடவினால் முடி உதிர்வு குறையும். 

              தயிர்

தயிரில் உள்ள புரோட்டீன் முடிக்கு வலுவூட்டுவதுடன், பளபளப்பை தரும். 

       நெல்லிக்காய்

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட்கள், வேரிலிருந்து முடியை வலுப்படுத்தும்.

            முட்டை

முட்டையில் உள்ள புரதம் மற்றும் பயோட்டின் முடி வளர்ச்சியை துரிதப்படுத்தும்.