13 NOV 2024
Author Name : Vinalin Sweety K
Pic credit - Unsplash
ஆண்ட்ராய்டு பயனர்களின் ஒரு மிக பெரிய பிரச்னையாக ஸ்பேம் கால்கள் உள்ளன.
இந்த ஒரு சேவையை உங்கள் ஸ்மார்ட்போனில் ஆக்டிவேட் செய்வதன் மூலம் ஸ்பேம் கால்களை முற்றிலுமாக தவிர்க்கலாம்.
Do Not Call Registry-ல் பதிவு செய்வதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் ஸ்பேம் கால்கள் முற்றிலுமாக நிறுத்தப்படும்.
அதற்கு உங்கள் மொபைபில் உள்ள குறுஞ்செய்தி செயலியை திறந்து "START" என டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள்.
அந்த குறுஞ்செய்தியை தொடர்ந்து உங்களுக்கு ஒரு பட்டியல் அனுப்பப்படும். அதில், வங்கி, மருத்துவமனை உள்ளிட்ட ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதில் நீங்கள் எந்த போன் கால்களை தவிர்க்க விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்து அனுப்புங்கள்.
இதற்கு பிறகு உங்களுக்கு DND சேவையை அமல்படுத்துவதற்கான உறுதி படுத்தும் குறுஞ்செய்தி வரும். அதன் பிறகு 24 மணி நேரத்தில் உங்கள் ஸ்மார்ட்போனில் DND சேவை ஆக்டிவேட் ஆகிடும்.