இணையத்தில் வைரலாகும் நடிகர் நானியின் சிறுவயது போட்டோ

14 September 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

1984ம் ஆண்டு, பிப்ரவரி 24ம் தேதி பிறந்த நானியின் இயற்பெயர் கண்டா நவீன் பாபு.

பிறப்பு

ரேடியோ ஜாக்கியாக இருந்த நானி, தனது விடா முயற்சி மற்றும் கடின உழைப்பால் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

ரேடியோ ஜாக்கி

நடிகராவதற்கு முன்பு சில படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். பல படங்களில் வாய்ஸ்-ஓவர் ஆர்டிஸ்டாகவும் இருந்துள்ளார்.

உதவி இயக்குநர்

நடிகர் நானி கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ஆஸ்தா சம்மா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

அறிமுகம்

நானி பெயர் வரும் படியான நான் ஈ படம் தான், நானிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது.

நான் ஈ

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான நான் ஈ படம், நானியை தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக்கியது.

தமிழ் ரசிகர்கள்

நானி நடிப்பில் வெளியான ஜென்டில்மேன், நேனு லோக்கல், மிடில் கிளாஸ் அப்பாயி மற்றும் கேங் லீடர் உள்ளிட்ட படங்கள் நானியை முன்னணி நடிகர்களின் பட்டியளில் கொண்டு சேர்த்தது.

படங்கள்

ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நானியின் நடிப்பில் வெளியான ஜெர்சி படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

ஜெர்சி

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இவரது நடிப்பில் வெளியான சரிபோதா சனிவாரம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

சரிபோதா சனிவாரம்

நடிகர் நானியின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சிறுவயது புகைப்படம்