12 Decemeber 2024

ஹாப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார்! நடிகர் ரஜினியின் சினிமா பயணம்..!

Pic credit - twitter

Barath Murugan

நடிகர் ரஜினிகாந்த் 1950ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு சாதாரண மராத்தியக் குடும்பத்தில் பிறந்தார்.

பிறப்பு

நடிகர் ரஜினிகாந்த்தின் உண்மையான பெயர் ரஜினி இல்லை, அவரின் பெயர் "சிவாஜி ராவ் கொய்க்வாட்" என்பது ஆகும்.

உண்மையான பெயர்

சிறுவயதில் முதல் நடிப்பில் ஆர்வம் காட்டிய ரஜினி,  மகாபாரதத்தில் உள்ள கதாபாத்திரமான ஏகலைவனின் நண்பன் கதாபாத்திரத்தில் மேடை நாடகங்களில் நடித்தார்.

நடிப்பின் ஆர்வம்

மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்கும் போது  இவருக்கு சினிமா மீது இருக்கும் ஆர்வத்தைக் கவனித்த  இயக்குநர் கே. பாலசந்தர் வாய்ப்பு கொடுத்தார்

முதல் திரைப்படம்

தமிழ்ப் படங்களில் நடித்து வெற்றி கண்ட ரஜினிக்கு, 1983ம் ஆண்டு இயக்குநர் டி.ராமாராவ் இயக்கத்தில் உருவான “அந்த கானூள்” என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்தி அறிமுகம்

 இவர் 1991ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கு ரசிகர்களை உருவாக்கினார்.

தளபதி வெற்றி

சினிமாவில் வரும் 2025ம் ஆண்டுடன் 50 வருடங்களைக் கிடைக்கவிருக்கும் நடிகர் ரஜினி தனது 74-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.  

74-வது பிறந்தநாள்