14 JULY 2024
Pic credit - Instagram
Petchi Avudaiappan
சூர்யா நேருக்கு நேர் படம் மூலமாகவும், ஜோதிகா வாலி படம் மூலமாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாயினர்
இருவரும் 1999ல் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் முதல் முறையாக இணைந்து நடித்தனர்.
பின்னர் உயிரிலே கலந்தது, காக்க காக்க, ஜூன் ஆர், மாயாவி, பேரழகன், சில்லுன்னு ஒரு காதல் என பல படங்களில் ஜோடியாக நடித்தனர்,
சூர்யா, ஜோதிகா இருவரும் காதலித்து 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இந்த ஜோடி காதல் ஐகானிக் ஆக திகழ்கின்றனர்
திருமணத்துக்குப் பின் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை சூர்யா தயாரித்தார்.
சூர்யா, ஜோதிகா இருவரும் சமீபத்தில் அம்பானி இல்ல திருமணத்தில் பங்கேற்றனர். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது
இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் என்றும் இளமையான ஜோடி என சூர்யா, ஜோதிகாவை புகழ்ந்து தள்ளியுள்ளனர்