நடிகை ஆண்ட்ரியாவின் அசத்தல் ஆல்பம்

20 August 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

தமிழ் சினிமாவில் நடிகை, பின்னணி பாடகி, டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முக திறமையுடன் வெற்றி நடையும் போட்டு வருபவர் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா.

பன்முக திறமை

விக்ரமின் அந்நியன் படத்தில் ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ பாடலை பாடியதன் மூலம் பாடகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார்.

பாடகி

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படத் துறைகளில் தனது நடிப்பின் மூலம் அசத்தியுள்ளார் ஆண்ட்ரியா.

தென்னிந்திய நடிகை

கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு படத்தில் பாடிய பிறகே அவரின் அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

பச்சைக்கிளி முத்துச்சரம்

தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான படைப்புகளுக்காக  அறியப்படும் இயக்குநர்களான கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வெற்றிமாறன், ராம், செல்வராகவன் உள்ளிட்டோரின் தேர்வாக ஆண்ட்ரியா என்றுமே இருந்துள்ளார்.

இயக்குநர்களின் நாயகி

தமிழ் சினிமாவிற்குள் காலடி வைத்த சிறிது காலத்திலேயே கமல், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை தொடர்ந்து பெற்றார் நடிகை ஆண்ட்ரியா.

முன்னணி நடிகர்களுடன் நடிப்பு

 ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ரீசன்ட் போட்டோ