14 Decemeber 2024
Pic credit - twitter
Author Name : Barath Murugan
நடிகை அதுல்யா ரவி 1994ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்துள்ளார்.
இவர் கோயம்புத்தூரில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் துறையில் படித்து பட்டம் பெற்றுள்ளார்.
இவர் சிறுவயதிலிருந்து நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர் "பல்வாடி காதல்" குறும்படத்தின் மூலம் மூலம் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.
நடிகை அதுல்யா 2017ம் ஆண்டு இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில் "காதல் கண்கட்டுதே" படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார்.
இவர் 2018ம் ஆண்டு கதாநாயகன் திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் உடன் நடித்து மிகவும் பிரபலமானார்.
இவர் 2019ம் ஆண்டு இயக்குநர் எம்.அன்பழகன் இயக்கத்தில் சாட்டை திரைப்படத்தின் தொடர்ச்சியான அடுத்த சாட்டை படத்தில் "போதும் பொண்ணு" என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
இவர் தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிகர் சசி குமாருடன் நாடோடிகள் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவாகி ஒரு வருடங்களுக்கு மேலான நிலையில், வரும் டிசம்பர் 31ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.
நடிகை அதுல்யா ரவி சென்னை சிட்டி கேங்ஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.