நடிகை சைத்ரா ரெட்டிக்கு ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?

நடிகை சைத்ரா ரெட்டி கன்னட டிவி சீரியலான ’அவனு மேட்டே ஷ்ரவாணி’ மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

பின்னர் கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்து அங்கு பிரபலமானார் சைத்ரா ரெட்டி.

தமிழ் சின்னத்திரையில் ப்ரியா பவானி சங்கருக்கு பதிலாக நடித்து கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ’யாரடி நீ மோகினி‘ என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சைத்ரா ரெட்டி.

’யாரடி நீ மோகினி‘ சீரியலில் ஸ்வேதா என்ற வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாலும் சைத்ரா ரெட்டிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் நடிகை சைத்ரா ரெட்டிக்கு ஃபாலோயர்ஸ் அதிகரித்தனர்.

நடிகை சைத்ரா ரெட்டி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

டிஆர்பி-யில் முன்னனி வகிக்கும் கயல் சீரியலில் நடிகை சைத்ரா ரெட்டி வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.

நடிகை சைத்ரா ரெட்டி கயல் சீரியலில் ஒரு நாள் எபிசோடிற்காக ரூ. 25,000 சம்பளம் வாங்குவதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.