கால் முளைத்த பூவே… ஹேப்பி பர்த்டே காஜல் அகர்வால்!

கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான 'கியூன் ஹோ கயா நா' என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால்.

தமிழில் நடிகர் பரத் உடன் ’பழனி’ படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட மாவீரன் படம் காஜல் அகர்வாலை தமிழ் மக்கள் மத்தியில் நன்கு கொண்டு சேர்த்தது.

அதனைத் தொடர்ந்து தமிழில் கார்த்தி, சூர்யா, விஜய், அஜித், ஜெயம் ரவி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் காஜல்.

தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை காதலித்து கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் காஜல் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துவரும் காஜல் அகர்வாலுக்கு இன்று 39வது பிறந்த நாள். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

NEXT: இன்ஸ்டாவில் அதிக பாலோவர்களை கொண்ட டாப் 10 நடிகைகள்!