ஹிந்தியில் காஜல் அகர்வால் நடித்த முதல் படம் எது தெரியுமா?

03 December 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துவரும் நடிகை காஜல் அகர்வால் ஜூன் மாதம் 19-ம் தேதி பிறந்த இவருக்கு தற்போது 39 வயதாகிறது.

பிறப்பு

தமிழில் நடிகர் பரத் உடன் ’பழனி’ படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

கோலிவுட் அறிமுகம்

ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட மாவீரன் படம் காஜல் அகர்வாலை தமிழ் மக்கள் மத்தியில் நன்கு கொண்டு சேர்த்தது.

மாவீரன்

அதனைத் தொடர்ந்து தமிழில் கார்த்தி, சூர்யா, விஜய், அஜித், ஜெயம் ரவி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் காஜல்.

முன்னணி நடிகர்களின் நாயகி

தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

பான் இந்திய நடிகை

தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை காதலித்து கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.

திருமணம்

கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'கியூன் ஹோ கயா நா' என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தி அறிமுகம்