தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.
ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சீம ராஜா, சர்க்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் கீர்த்தி சுரேஷ்.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் திரைப்படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்திருப்பார்.
சாவித்திரி கதாப்பாத்திரத்திற்கு கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
கீர்த்தி சுரேஷ் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பான் இந்திய மொழிகளில் முன்னனி நாயகியாக உயர்ந்துள்ளார்.
பேட்டி ஒன்றில் பேசிய கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு இன்னும் பொறுப்போடு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறேன்.
செட்டில் இருந்து வந்த பிறகும் அந்த கதாபாத்திரத்துடன் எமோஷன் ஆன ஒரு உறவு நீடிக்கிறது என்றால் அது நல்ல படம்.
அப்படியான மேஜிக் சில நேரங்களில் மட்டுமே நடக்கும். அப்படியான படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
NEXT: இவ்வளவு க்யூட்டான இந்த குழந்தை விஜய்க்கு ஜோடியாக நடித்தவர்… யார் தெரியுதா?