29 April 2024

image: Google

முத்தக்காட்சிகளால் படவாய்ப்புகளை மறுத்தேன் – மிருணாள் தாகூர்

சீதாராமம் படம் மூலம் அறிமுகமான மிருணாள் தாகூர் முத்தக்காட்சிகள் இருந்ததால் பல படங்களை மறுத்ததாக கூறியுள்ளார்.

துல்கர்கு ஜோடியாக சீதா ராமம் படத்தில் நடிகையாக அறிமுகமானார் மிருணாள் தாகூர்.

அதனை தொடர்ந்து சமீபத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக பேமிலி ஸ்டார் படத்தில் நடித்தார்.

சினிமாவில் பல படங்களை தவறவிட்டது குறித்து மிருணாள் தாக்கூர் பேசினார்.

அவர் பேசியதாவது, நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை நான் உண்மையில் விரும்பியதில்லை. அதை எனது பெற்றோரும் ஏற்கவில்லை.

இதனால் பல படங்களை மறுத்தேன். ஒரு நடிகராக, நீங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.

ஏனென்றால் சில நேரங்களில் அது படத்திற்கு தேவையாக இருக்கும்.

உங்களுக்கு வசதியாக இல்லை என்றால், நீங்கள் அதைப் பற்றி பேசலாம். முத்தக்காட்சிகளில் நடிக்காததால் நான் பல திரைப்படங்களை தவறவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

NEXT: அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்