19 JULY 2024
Pic credit - Instagram
Petchi Avudaiappan
தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக திகழும் பிரணிதா தான் சரும பரமாரிப்புக்காக பின்பற்றும் வழிமுறைகள் பற்றி தெரிவித்துள்ளார்
காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கிறேன். இதனால் என் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறுவது, வளர்ச்சிதை மாற்றத்துக்கும் உதவுகிறது
நாள்தோறும் உடலை நீரேற்றமாக வைத்திருப்பேன். குறைந்தது நாள் ஒன்றுக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பேன். உடலை நீரேற்றமாக வைப்பதால் சருமம் மிருதுவாக மாறும்.
உடல் ஆரோக்கியம் மற்றும் சருமத்தின் வளர்ச்சி ஆகியவற்றில் சமச்சீர் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.
அதனால் நிறைய பழங்கள், காய்கறிகள்,ஆரோக்கியமான கொழுப்புகள், கீரை, பெர்ரி மற்றும் நட்ஸ் வகைகளை எடுத்துக்கொள்வதால் வைட்டமின்கள் கிடைக்கிறது.
ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது ப்ரீரேடிக்கல்களால் ஏற்படும் சரும சேதத்தை தடுத்து இளமையாக காட்ட முடியும்.
அதேபோல் சரும பராமரிப்புக்கு என டோனிங் செய்வது ஈரப்பதமாக வைப்பது, நாள் ஒன்றுக்கு 2 முறை முகத்தைச் சுத்தம் செய்வது போன்றவை செய்வதால் சருமம் பொலிவு பெறுகிறது.